குழாய் மூலம் வீடுகளுக்கே வரும் கேஸ்.. 8 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி!
சென்னை: சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் விநியோகம் செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 8 இடங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள TIDCOவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
27 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த TIDCO அனுமதி கோரிய நிலையில் 8 இடங்களுக்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறக்குமதி செலவைக் குறைப்பதற்காகவும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் 8 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 27 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ (TIDCO) நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில் 8 இடங்களில் மட்டுமே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் அந்த 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ 26 வது தெரு, கண்ணாத்தாள் சாலை, ஆபீஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ, அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பிளாக் 40 வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜெய் நகர், நடேசன் நகர் மேற்கு உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications