Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2025 LIVE: அடியோடு மாறும் பேருந்து நிலையங்கள்.. மேயர் பிரியா அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி வளாகத்தில் உள்ள மாமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மேயர் பிரியா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் விவரங்களை இங்கே நேரலையாக அறிந்து கொள்ளலாம்.

Chennai Corporation Budget 2025  Chennai  Mayor Priya                                                                          2025

Mar 19, 2025, 1:30 pm IST

பார்க்கில் புத்தகம் வாசிக்க தனி ஏரியா!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் (Reading zone) அமைக்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 1:13 pm IST

2025 - 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் காலநிலை முதலீடுகள் குறித்த அறிக்கை சென்னை மாநகராட்சியால் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 12:33 pm IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம் 2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39 மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு.
Mar 19, 2025, 12:32 pm IST

பேருந்து நிலையங்களை மேம்படுத்த ரூ. 16 கோடி

பேருந்து நிலையங்களை மேம்படுத்த ரூ. 16 கோடி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம் 2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39 மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு.
Mar 19, 2025, 12:18 pm IST



பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் (WhatsApp) அடிப்படையிலான தகவல் தொடர்புகள் உருவாக்கப்படும். இதற்கு 4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
Mar 19, 2025, 12:04 pm IST

சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக வரும் பொதுமக்களுக்காக, பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
Mar 19, 2025, 11:54 am IST

மேம்பாலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை அழகுபடுத்திட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு.
Mar 19, 2025, 11:44 am IST

டிஜிட்டல் போர்டுகளில் தனியார் விளம்பரம்

சென்னையில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்னணு அறிவிப்புப் பலகைகளைத் தொடர்ந்து தனியார் கூட்டாண்மை முறையில் ரூபாய் 9 கோடி முதலீட்டிலும், சென்னை மாநகராட்சியின் நிதியிலிருந்து ரூபாய் 6 கோடி செலவினத்திலும் கூடுதலாக 100 எண்ணிக்கையிலான மின்னணு அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு செய்திகள், அரசு விளம்பரங்கள், மற்றும் தனியார் விளம்பரங்கள் ஆகியன இடம்பெறச் செய்து அதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
Mar 19, 2025, 11:40 am IST

குப்பை - கண்காணிக்க 400 கேமராக்கள்

சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணித்திட கூடுதலாக 400 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கு 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 11:38 am IST

மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி உயர்வு

<h2>மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி உயர்வு</h2>
2025-2026 ஆம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூபாய் 3 கோடியிலிருந்து ரூபாய் 4 கோடியாக உயர்த்தப்படுகிறது.
Mar 19, 2025, 11:31 am IST

வார்டு மேம்பாட்டு நிதி உயர்கிறது!

2025-2026 ஆம் நிதியாண்டு முதல் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 60 லட்சமாக உயர்த்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 11:27 am IST

சென்னையை அழகாக்க..!

சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5 கோடி ஒதுக்கீடு.
Mar 19, 2025, 11:21 am IST

ஆரம்ப சுகாதார நிலையங்களில் லிஃப்ட் வசதி!

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மாநகராட்சியில், புதியதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி (Lift) வசதிகள் செய்யப்படும். இதற்காக சென்னை பட்ஜெட்டில் 5 கோடி ஒதுக்கீடு.
Mar 19, 2025, 11:21 am IST

மருந்து காப்பக அறைகளில் ஏசி

<h2>மருந்து காப்பக அறைகளில் ஏசி</h2>
சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டு (AC) வசதிகள் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
Mar 19, 2025, 11:20 am IST

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 இடங்களில் உணவு விற்பனை மண்டலங்கள் அமைக்கப்படும்

வடசென்னையில் புதிதாக 2 பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்

மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
Mar 19, 2025, 11:20 am IST

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முதியோருக்கு தனி நல பிரிவு

<h2>ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முதியோருக்கு தனி நல பிரிவு</h2>
முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30 லட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
Mar 19, 2025, 11:18 am IST

தகன மேடைகளில் ஜெனரேட்டர்

<h2>தகன மேடைகளில் ஜெனரேட்டர்</h2>
பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளிலுள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்கள் நிறுவப்படும். மேலும் இவற்றிற்குத் தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 11:13 am IST

சென்னை மாநகராட்சி 2025-26 பட்ஜெட் ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.4464 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் உருவாக்கப்பட்ட நிலையில், வரும் 2025-2026 நிதி ஆண்டிற்கு ரூ.5145.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 11:13 am IST

தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்

தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 2.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
Mar 19, 2025, 11:13 am IST

போட்டித் தேர்வுகள் - மாணவர்களுக்கு பரிசுகள்

சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+