சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கலர் ஐடி கார்டு.. பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரிப்பன் கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் மேயர் ஆர்.பிரியா இன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரலில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும் மக்களைத் தேடி மேயர், மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை உயர்த்தியது, காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த புதிய பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது போல் மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ 47 லட்சம் நிதியும் வண்ண அடையாள அட்டைகளை வழங்க ரூ 61 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அது போல் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இரு செட் சீரூடை, ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். 2 கல்லூரிகளில் ரூ 50 லட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்கல்வி அமைக்கப்படும்.சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ 7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கு ரூ 10 கோடி மதிப்பில் பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் ப்ரூப் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 21 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும். சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் இடிக்கப்படும்.
ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும். சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் ‛டேப்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் தடுப்பு நிதி உள்பட பிற திட்ட நிதிகளில் இருந்து மழைநீர் வடிகால் பணிகளுக்காக 2024-25ம் ஆண்டில் ரூ.537 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications