“குப்பைகளை பிரித்துக் கொடுக்காவிட்டால் அபராதம்” - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் அந்த குப்பைகளைப் பிரித்துக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை ஆணையர் சித்ரா விஜயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai Corporation Commissioner Sameeran Warns of Fine for Failing to Segregate Garbage

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் டாக்டர்.சமீரன், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள், திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளைத் தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை கண்காணித்திட பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகளையும் குப்பைகளை உருவாக்குபவர்களுடைய வளாகத்திற்குள் வைத்து குப்பைகளை வழங்கிட வேண்டும். வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள், கட்டாயம் திடக்கழிவினைத் தரம் பிரித்து வழங்கிட வேண்டும், மீறுவோர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல், குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் இருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் மத்திய வட்டாரப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி முடிக்கப்பட்டு 94 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதில் 28,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதுவரை 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் 16 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இப்பணிகளைக் கண்காணித்து விரைந்து முடித்திட வேண்டும். அத்திப்பட்டு குப்பை கிடங்குகளில் குப்பைகளை முதற்கட்டமாக நடைபெற்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் 1 லட்சம் கனமீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணி மேற்கொள்ளப்பட்டு இதில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+