பதவியேற்ற சென்னை பாஜக கவுன்சிலர் "கோட்ஸே புகழ்" உமா ஆனந்தன்! உறுதிமொழி ஏற்பில் நடந்த சுவாரசியம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியாகின. இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டு கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சி சென்னை தான். இங்கு மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வெற்றி
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக 153 வார்டிலும், அதிமுக 15 வார்டிலும் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், மதிமுக. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஐந்து வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பதவியேற்பு
இந்நிலையில், அனைத்து கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக-வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொல்லி பதவி ஏற்றுக் கொண்டனர். மதிமுக கவுன்சிலர் வைகோவுக்கு நன்றி சொல்லியும், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கு நன்றி சொல்லியும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

உமா ஆனந்தன்
சென்னை மாநகராட்சியில் பாஜக சார்பில்ல் வார்டு எண் 134ல் போட்டியிட்ட உமா ஆனந்தன் கிட்டத்தட்ட 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோட்சே குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியவர் உமா ஆனந்தன். தன்னை கோட்சேவின் மாணவர் என்றும் அழைத்தவர். இவரும் இன்று கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, ''தெய்வ அனுக்கிரகத்தால் வெற்றிபெற்றேன். நான் நித்தம் வணங்கும் தில்லை அம்பலதானுக்கும், அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம்" என்று சொல்லி பதவியேற்றார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications