இதெல்லாம் வேற லெவல் பிளான்..! கிண்டி ரேஸ் கிளப்பில் 4 புதிய குளங்கள்.. சென்னை மாநகராட்சி சபாஷ்
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்கள் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் அதற்கான பணிகளும் பள்ளங்கள் தோண்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 3 குளங்கள் உள்ள நிலையில் தற்போது அமைக்கப்படும் புதிய குளங்களால் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் தான், ரூ. 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி ரேஸ் கோர்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஸ் கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு, ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது. 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.
இந்த ரேஸ் கிளப்பில் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய அளவிலான பசுமைப் பூங்காவை உருவாக்க உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரேஸ் கிளப்பில் ஏற்கனவே மூன்று குளங்கள் உள்ள நிலையில், புதிதாக 4 குளங்களை வெட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தற்போது உள்ள 3 குளங்களில் 30 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும். புதிய குளங்கள் அமைக்கப்படுவதன் மூலமாக 100 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது முழு வீச்சில் குளங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications