அம்பத்தூரே அசந்து போச்சு.. பல வருட பிரச்சனை நிரந்தர தீர்வு.. சென்னை மாநகராட்சி அசத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சியின் விடாமுயற்சியால் பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மண் வடிகாலாக இருந்த அம்பத்தூர் உபரி நீர் கால்வாய், கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் வரை வெள்ள காலங்களில் மக்கள் ஓரளவு வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையைப் போல் எந்த ஒரு நகரமும் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக மிகப்பெரிய விஷயங்களை இதுவரை இழக்கவில்லை.. சென்னை மாநகரம் இப்போதே ஏராளமான ஏரிகள் உள்ள நகரமாக உள்ளது. ஆனால் இப்போது உள்ளதை விட மிகமிக அதிக அளவில் குளங்களும், ஏரிகளும், இருந்தன. மிக தூய்மையான மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாக சென்னை இருந்துள்ளது. தண்ணீருக்கு எந்த வகையிலும் சிக்கல் இல்லாத அளவிற்கான நகரம் என்பதை அறிந்ததே வெள்ளையர்கள் சென்னையை தலைநகரமாக மாற்றியிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது நகரமாக இருந்த பகுதிகளில் இன்று வரை வெள்ளப்பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் அங்கு வெள்ளநீர் வடிகால்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை கவனித்தாலே உங்களுக்கு புரியும். ஆனால் சென்னை வளர்ந்த பிறகு புறநகர் பகுதிகள் வளர வளர அந்த பகுதிகளில் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் ஏரிகளை ஆக்கிரமித்து வீடு, வணிக நிறுவனங்கள் கட்டியது தான். சென்னை முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள்,நீர் வழிப்பாதைகள் எண்ணிக்கையை எண்ணவே முடியாது. கிட்டத்தட்ட எல்லா ஏரிக்களுமே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன.
தென்சென்னையில் பள்ளிக்கரணை ஏரி என்றால், வட சென்னையில் கொரட்டூர் ஏரியும், தாம்பரம் பக்கம் பல்லாவரம் ஏரியும் மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. 2015 ம் ஆண்டு வரை தொடர்ந்த ஆக்கிரமிப்புகள் அப்போது பெய்த பேய்மழைக்கு பிறகே முடிவுக்கு வந்தன. அதுவரையில் ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, முடிச்சூர் என அந்த காலங்களில் நீர் வழிப்பாதைகள் எல்லாமே வீடுகளாக மாறின.
மக்கள் மட்டுமே ஆக்கிரமித்தார்கள் என்று அர்த்தம் அல்ல. அரசியல் கட்சியனரும் வணிக நிறுவனங்களும், ஏன் அரசுகளுமே ஆக்கிரமித்தார்கள். இவை அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் முறைப்படுத்தப்பட்டன. 2015க்கு பிறகு யாரையும் அரசு ஆக்கிரமிக்க அனுமதிப்பது இல்லை.. புதிதாக நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமிக்க மாநகராட்சி அதிகாரிகளும் விடுவது இல்லை.. அதே போல்ஏற்கனவே இருந்த மிக ஆபத்தான ஆக்கிரமிப்புகளை அகற்றியும் விட்டார்கள். இப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பபட்டு வரும் அதேநேரம், புதிய நீர் வழிப்பாதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு ஏரியும் இன்னொரு ஏரியும் எதார்த்தமாக இணைந்திருந்த பகுதிகள் எல்லாம் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் இப்போது அங்கு தண்ணீர் செல்ல புதிய கால்வாய்கள் வெட்டப்படுகின்றன. அந்த வகையில் பல்லாவரம் முதல் பள்ளிக்கரணை வரை புதிய கால்வாய்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தான் சென்னை மாநகராட்சியின் விடா முயற்சியால் பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மண் வடிகாலாக இருந்த அம்பத்தூர் உபரி நீர் கால்வாய், கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது.
வணக்கம் #சென்னைமக்களே,
— Greater Chennai Corporation (@chennaicorp) August 3, 2024
பெருநகர சென்னை மாநகராட்சியின் விடாமுயற்சியால் பற்றவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மண் வடிகாலாக இருந்த அம்பத்தூர் உபரி நீர் கால்வாய், கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டுள்ளது.
👉மண்டலம் 7,வார்டு 82#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/isnlaFN3Rp
இதுபற்றி மாநகராட்சி வெளியிட்ட வீடியோ அறிவிப்பில், பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் அம்பத்தூர் உபரி நீர் கால்வாய், மழைநீர் காலங்களில், நீரை கொரட்டுர் ஏரிக்கு கொண்டு செல்கிறது. சாதாரண மண் வடிகால் கால்வாயாக மட்டுமே இருந்த காரணத்தால், மண் அடைப்பினாலும், மண் சரிவினாலும், இதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன..
பெருநகர சென்னை மாநகராட்சியின் விடா முயற்சியால், பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் வடக்கு பகுதியில் இருந்து கொரட்டூர் ஏரி வரை, இதுவரை 700 முதல் 1100 மீட்டர் வரை கான்ங்ரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 400 மீட்டர் தூரம் கால்வாய் அமைக்கும் பணி இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. இந்த கால்வாயின் வரவால் ஓட்டேரி கால்வாய் சுமை குறைந்து கொரட்டூர் ஏரிக்கு மழை நீர் சுலபமாக கொண்டு செல்லப்படும்" இவ்வாறு சென்னை மாநகராட்சி அந்த வீடியோவில் கூறியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications