வரப்பிரசாதம்.. சென்னையில் நீளமான மேம்பாலம் வரப்போகுது.. டோட்டலா மாறும் பிரம்மாண்டம்.. எங்கே பாருங்க
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும்நிலையில், சென்னை மாநகராட்சி பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.
தி.நகரில் பீக் ஹவரில் 10 ஆயிரம் வாகனங்களும், சாதாரண நேரங்களில் 5 ஆயிரம் வாகனங்கள் வரையும் செல்வதால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.. இதற்கு காரணம், தி.நகர் பஸ் ஸ்டாண்டு, ரங்கநாதன் தெரு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

பிரமாண்டம்: அதிலும் வார நாட்களிலும் பண்டிகை காலங்களிலும், தி.நகரில் கால் வைக்கவே இடம் இருக்காது.. அதனால்தான், சென்னை மாநகராட்சி தி.நகரில் பிரமாண்டமாய் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர் இடையே, இந்த புதிய இரும்பு மேம்பாலம் வரப்போகிறது.. தி.நகர் பஸ் நிலையம், விவேக் ஜங்ஷன், ஆற்காடு ரோடு சந்திப்பு ஆகியவற்றை கடந்து மகாலிங்கபுரத்தில் இந்த மேம்பாலம் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்படுகிறது
உஸ்மான் ரோடு: ஏற்கனவே, இதே இடத்தில் உள்ள மேம்பாலத்தின் சாய்தளத்தை அகற்றிவிட்டு, இந்த புதிய மேம்பாலத்தை அதனுடன் இணைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் - மகாலிங்கபுரம் மேம்பாலத்தையும் இணைத்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது... அப்படியானால், இதுதான் சென்னையின் மிக நீளமான மேம்பாலமாக இருக்க போகிறது..
ஒரே மேம்பாலம் 4 பகுதிகளாக இருக்க போகிறது. அதாவது, சிஐடி நகரில் இருந்து உஸ்மான் சாலை மேம்பாலம் வரை இரும்பு மேம்பாலமும், உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து பனகல் பார்க் வரை ஏற்கனவே இருக்கும் கான்கிரீட் மேம்பாலமும், பனகல் பார்க்கில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை வரை இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது, வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து மகாலிங்கபுரத்திற்கு ஏற்கனவே கான்கிரீட் மேம்பாலமும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி புதிய பாலத்தின் மேல்பகுதி, கான்கிரீட்டால் உருவாக்கப்படுவதால் பழைய பாலத்துடன் அதனை இணைக்கும்போது எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது என்கிறார்கள் அதிகாரிகள்.. மேலும், பாலத்துக்கு கீழே உள்ள இடத்தை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.. பாலச்சுவர்களில் வர்ணங்களை பூசி செடிகளை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.
5 நிமிடம்: இந்த மேம்பாலம் வந்துவிட்டால், 30 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை வெறும் 5 நிமிடத்தில் கடக்கலாம் என்கிறார்கள்.. அனைத்து வாகனங்களுமே பாலத்தில் சென்று விடும்.. இதனால் தி.நகர் ரங்கநாதன் தெரு, தி.நகர் பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் பலகாலமாகவே நீடித்துவரும் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் குறைந்து விடும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
கூடிய விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
தேனாம்பேட்டை: ஏற்கனவே, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை மேம்பாலம் வரப்போகிறது.. அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு வரும்நிலையில், இது சென்னையின் இரண்டாவது நீளமான மேம்பாலமாக அமையும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications