கொரோனா அறிகுறி நபர்களின் விவரங்கள் வேணும்.. தனியார் கிளினிக்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வரும் நபர்களின் விவரங்களை தர வேண்டும் என தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகள், பொது மருத்துவர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் வேகம் சற்று குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

Chennai Corporation has directed private clinics to provide details of persons with symptoms of corona infection

தினமும் 36,000-க்கு மேல் பதிவாகி அச்சுறுத்தி வந்த பாதிப்புகள் தற்போது 35,000-க்கு கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பும் கொஞ்சம் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் பாதிப்புகள் வேகமாக குறைந்து வருவது மற்ற மாவட்ட மக்களுக்கு தெம்பை ஊட்டியுள்ளது. சில வாரத்துக்கு முன்பு சென்னையில் 6,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்து வந்தன.

தற்போது 4,000-க்கும் கீழ் பாதிப்புகள் குறைந்து விட்டன. சென்னை மாநகராட்சி மேற்கொண்ட துரித நடவடிக்கையே இதற்கு காரணமாகும். வீடு, வீடாக பரிசோதனை, தொற்றை கண்டறிந்து உடனடியாக தனிமைப்படுத்துதல், கொரோனா பணிகளை மேற்கொள்ள வார் ரூம் என்று பல பணிகளை சிறப்பாக செய்தது சென்னை மாநகராட்சி.

கொரோனாவை மேலும் கட்டுக்குள் கொண்டு வர மேலும் சில நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்கவுள்ளது. அதன்படி சென்னையில் கொரோனாபாதிப்பு அறிகுறிகளுடன் வரும் நபர்களின் விவரங்களை தர வேண்டும் என தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகள், பொது மருத்துவர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கிளினிக்குகளுக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், தொற்று அறிகுறி விவரத்தை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+