வெள்ளத்தில் பரிதவிக்கும் சென்னை.. 10,000 பேருக்கு இரவு உணவு தயார் செய்த சென்னை மாநகராட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இரவு உணவு தயார் செய்து அனுப்பி வைத்தது. வடகிழக்கு பருவமழை நேற்று இரவு முதல் சென்னையை புரட்டிப் போட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு சென்னையில் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் மிக மோசமான அளவுக்குத் தேங்கியுள்ளது

வடசென்னை மற்றும் தென் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது. தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய உதவி எண்களையும் சென்னை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Chennai Corporation has prepared and sent dinner to 10,000 people affected by the floods in the RK Nagar area

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பத்திரமாக வெளியயேற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவுப்படி ஆர்கே நகர் இரட்டை குழி தெரு,திலகர் நகர், சிவாஜி நகர், கொருக்குப்பேட்டை நேரு நகர், வினோபா நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திலும், குடிசை வீடுகளில் தங்கி உள்ளவர்கள் அரசு சார்பாக சமுதாய கூடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் மு. க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆலோசனையின்படி, மண்டலம் நான்கின் சார்பாக மண்டல அலுவலர் கோவிந்தராசு ஆர்கேநகர் உதவி செயற்பொறியாளர் விக்டர் வரி மதிப்பீட்டாளர் ஸ்டாலின் ஆகியோர் மேற்பார்வையில் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 10,000 நபர்களுக்கு வழங்குவதற்காக இரவு உணவு தயார் செய்யப்பட்டது.
இந்த உணவு வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+