சென்னையில் முதல்முறை.. மேம்பால வடிவமைப்பில் மாநகராட்சி சூப்பர் திட்டம்.. அதுவும் திநகரில்!
சென்னை: சென்னை திநகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியில் முதன்முறையாக இரும்பை பயன்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னை மாநகரை மேம்பால நகரம் என்று அழைக்கலாம். ஆனாலும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் போதவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் அமைத்தால் தான் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற அளவிற்கு நிலைமை உள்ளது. சில இடங்களில் கத்திபாரா போல் மேம்பாலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வளவு பெரிய இடம் இல்லை.

சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த மேம்பாலத்தை அப்படியே தாம்பரம் பெருங்களத்தூர் வரை ஆங்காங்கே ஏறும் அல்லது இறங்கும் இடங்களை மட்டும் அமைத்து முழுமையாக பஸ் மேம்பாலம் அமைத்தால் தான் இப்போது உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இப்படி சொல்லக் காரணம் அந்த அளவிற்கு தாம்பரம் முதல் கிண்டி வரை வாகன நெருக்கடி அதிகரித்துவிட்டது.
சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு புதிய மேம்பாலங்கள் அமைத்து வருகிறது. எங்கெல்லாம் மேம்பாலம் தேவை என்பதை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்டவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. இந்த பாலம் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தின் உள்ள சாய்தளத்தை தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்கப்பட உள்ளது.
தற்போது திநகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீ நீளம் கொண்டது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக மேம்பாலம் 1200 மீ அளவில் அமைக்கப்பட உள்ளது.
தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் அமைத்தால் தி நகரில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
புதிய மேம்பாலம் 1200 மீ நீளத்தில், 8.40 மீ அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைக்கும் பணிக்கு கட்டுமான பணிகளில் புதிய முறையை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி இருக்கிறது. இதில், பாலத்துக்கான தூண்களை இரும்பை கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பொதுவாக தற்போது வரை சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டு தான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக பாலங்களுக்கான தூண்கள் இரும்பு கொண்டு அமைகப்படுகிறது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டாலும் தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் தான் அமைக்கப்படுமாம்.
சேலம் இரும்பு ஆலை இந்த தூண் போன்ற வடிவமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும். சென்னையில் இரும்பு தூணால் அமைக்கப்படும் முதல் மேம்பாலம் இதுதான் என்கிறார்கள் அதிகாரிகள்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications