சென்னையில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய இரு ராட்வைலர் நாய்களும் மதுரைக்கு இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சிறுமியை கடித்த இரு ராட்வைலர் நாய்களையும் அப்புறப்படுத்துமாறு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில் அந்த இரு நாய்களும் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக உள்ளவர் ரகு. இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு சுதிக்ஷா என்ற 5 வயது மகள் உள்ளார்.

Chennai Corporation issues notice to remove Rottweiler dogs who bite 5 years old girl

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த சிறுமியை ராட்வைலர் நாய்கள் கடித்து குதறின. இதில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தாய் சோனியா ஓடி வந்து குழந்தையை நாய்களிடம் இருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் அவரையும் கடித்தது.

அப்போது அருகே இருந்த மதன் என்ற இளைஞர் அந்த சிறுமியின் கால்களை பிடித்து இழுத்து வெளியே தூக்கிக் கொண்டு ஓடினார். இதையடுத்து சிறுமியை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்குமாறும் அதற்கு என்ன செலவானாலும் தான் பார்த்துக் கொள்வதாகவும் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறியதன் பேரில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழேந்தி, ஆண், பெண் என இரு நாய்களை வளர்த்து வருகிறார். அவை ராட்வைலர் இனத்தை சேர்ந்தவை. மிகவும் ஆக்ரோஷமான நாய்கள் என அறியப்படுகிறது. இந்த நாய்களுக்கு ஒரு குட்டியும் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாய்களின் குட்டியை விற்பனையும் செய்துவருகிறாராம். புகழேந்தி எங்கு சென்றாலும் அந்த நாய்களை கடிவாளம் இல்லாமல் சர்வ சாதாரணமாக உலவ விடுவார் என அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் நோட்டீஸை தொடர்ந்து இரு நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு உரிமையாளர் புகழேந்தி இடமாற்றம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+