ஆதார் அட்டை, போன் கொண்டு வாங்க.. சாலையோர வியாபாரிகளுக்கு பறந்த ஆர்டர்! இன்று முதல் சிறப்பு முகாம்!
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
தமிழக அரசு, பல்வேறு தரப்பு மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சாலையோர வியாபாரிகள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சாலையோரங்களில் பல ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. சாலையோர கடைகளை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் சாலையோர கடைகளில் குறைந்த விலையிலேயே கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் சாலையோர கடைகளில் வாங்குவார்கள்.
சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் நவம்பர் 30 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமானது இன்று (நவம்பர் 22 ஆம் தேதி) முதல் நவம்பர் 30 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நகர விற்பனைக் குழுவின் சார்பில் நவம்பர் 6 ஆம் தேதி அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக நவம்பர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications