பிரச்சனைன்னு வந்தால் மட்டும் அதிகாரிகளுக்கு நாங்க வேணும்! மேயர் பிரியாவிடம் கவுன்சிலர்கள் ஆதங்கம்!
சென்னை: வார்டுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டும் அதிகாரிகள் தங்களை தேடுவதாகவும் மற்ற நேரங்களில் கண்டுகொள்வதே கிடையாது எனவும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் ப்ரியா ராஜனிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
இதையடுத்து வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றும் அதற்குரிய உரிமை கவுன்சிலர்களுக்கு உள்ளது எனவும் அதிகாரிகளுக்கு அட்வைஸ் அளித்தார் ப்ரியா ராஜன்.

தமிழகம் முழுவதும் மேயர் கவுன்சிலர்கள் இடையேயான பிரச்சனைக்கு காரணமே கவுன்சிலர்கள் சொல்லும் குறைகளை மேயர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பது தான். ஆனால் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அதில் விதி விலக்கு. கவுன்சிலர்கள் குறைகளை சொன்னால் உடனுக்குடன் அதனை நிவர்த்தி செய்து தனது பெயரை டேமேஜ் ஆகாமல் கவனித்துக்கொள்கிறார் மேயர் ப்ரியா ராஜன்.
அந்த வகையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அதிகாரிகள் மீது ஏகத்துக்கும் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து ஆன் தி ஸ்பாட்டிலேயே சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுடன் இது குறித்து பேசி, கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்வதில் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இனிமேல் வார்டுகளில் எந்தப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்ற உறுதியை அளித்தார். இதேபோல் ஒவ்வொரு மாநகராட்சியிலும் கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் மேயர்கள் ரெஸ்பான்ஸ் கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதைவிடுத்து கோஷ்டிக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நின்றால் பிரச்சனையும் தீராது சர்ச்சையும் ஓயாது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications