கொரோனா ‘விறுவிறு’.. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை கமிஷனர் போட்ட ஆர்டர்- மீறினால் அதிரடி ஆக்ஷன்!
சென்னை : கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 94 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மாநகராட்சி உத்தரவு
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்களை தெரிக்க வேண்டும்
இதுக்குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கோவிட் தொற்று 250 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தகவல்கள் வராததால்
தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கொரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வராமல் இருப்பதாலும், கொரோனா தொற்று பரவல் குறித்து முழுமையான தகவல் சென்னை மாநகராட்சியின் வசம் இல்லாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீறினால் நடவடிக்கை
மேலும், கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கொரோனா தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் பெயர், முகவரி, கைபேசி எண், அறிகுறி மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர், முகவரி, கைபேசி எண், கோவிட் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நாள், மருத்துவமனை பெயர் மற்றும் முகவரி, வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்ட நாள் ஆகிய தகவல்களை சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகவல் தெரிவிக்க தவறினால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 மற்றும் சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேசன் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications