5,852 குடும்பங்களுக்கு ரூ.6000 + கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.. தமிழக அரசுக்கு முக்கிய பரிந்துரை!
சென்னை: எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க மாநகராட்சி, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மிக்ஜாம் புயலின் போது சென்னை அருகே உள்ள எண்ணூர் சி.பி.சி.எல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்தது. வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் கச்சா எண்ணெய்யும் கலந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்தது. வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கலந்த மழைநீர் புகுந்தது. மீன்பிடி படகுகளிலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது உடலிலும், உடையிலும் எண்ணெய் படிந்தது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் வீசியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள் நெட்டுக்குப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ததில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கச்சா எண்ணெய் பரவி இருப்பது தெரியவந்தது. கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் கடலோர காவல் படையும் நிலப்பகுதிகளில் படிந்த எண்ணெய்யை மாநில அரசும் அகற்றி வருகிறது.
75 படகுகள் மூலம் கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெட்டுக்குப்பத்தில் கொசஸ்லை ஆற்றில் படிந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 உடன் கூடுதல் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்திடம் தொகையைப் பெற்று அதனை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட 5,852 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications