சென்னையில் நிலத்தடி நீர் உயருது.. 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டின.. மாநகராட்சி சொன்ன சூப்பர் சேதி!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் தற்போது குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் புத்துயிர் காரணமாக குளங்களின் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது என்றும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அண்மையில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 59 குளங்கள் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீரை சேகரிக்கின்ற வகையிலும் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக 50 குளங்கள் அதன் முழு நீர்தேக்கும் திறனை அடைந்து, நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
இதில், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம், எலந்தனுர் குளம், பர்மா நகர் குளம் ஆண்டார்குப்பம் கிராமக் குளம், ஆண்டார்குப்பம் மயானபூமிகுளம், குளக்கரை குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், வடபெரும்பாக்கம் சாமுவேல் நகர் மயானபூமி குளம், கதகுளி மயானபூமி குளம், கொசப்பூர் ஸ்ரீ வேம்புலியம்மன் கோயில் குளம், கொசப்பூர் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் குளம், தீயம்பாக்கம் குளம், தீயம்பாக்கம் காந்திநகர் குளம், சின்னத் தோப்பு குளம், செட்டிமேடு குளம், ஓலக்குளம், மூலகண்டமாரியம்மன் கோயில் தெரு குளம் ராமலிங்கபுரம் தேவராஜ் தெரு குளம், மாசிலாமணி நகர் குளம், ராமலிங்கசாமி கோயில் குளம் ஆகியவை நிரம்பி உள்ளன.

மேலும், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம், பேசின் ஏரி முள்ள குளம், செல்லக் குளம், இதயன் குளம், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வைரக்குளம், சிவாவிஷ்ணு குளம், கொரட்டூர் தாங்கல் குளம், மீனாம்பேடு தாங்கல் குளம், கங்கையம்மன் குளம் ஆகியவை நிரம்பி உள்ளன. அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பரசுராமர் கோயில் குளம், காசி விஸ்வநாதர் கோயில் குளம் ஆகியவையும் நிரம்பி உள்ளன. தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட அகத்தீஸ்வரர் கோயில் குளம், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பாஸ்கர் காலனி குளம் நிரம்பி உள்ளது.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதீஸ்வரர் கோயில் குளம், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஊத்துக் குளம் வண்ணான் குளம், ஜல்லடியான்பேட்டை குணம், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வண்ணகேணி மற்றும் தட்சன் கேணி குளம் அலிலாதீஸ்வரர் கோயில் குளம், புறா குளம், புல்லா கேணி, அனுமன் காலனி தான்தோன்றியம்மன் கோயில் குளம், நாட்டுப் பன்னை குளம் சோலிமா கார்டன் குளம், பெடரியம்மன் கோயில் குளம் வல்வேட்டி தூங்கல் ஏரி தெற்கு எல்லை பேட்டைருளம், சாராயக் குளம், ரெட்டைக் குட்டை தாங்கல் குளம் ராமன் தாங்கல் எரி புதுச்சேரி குளம் கங்கையம்மன் கோயில் குளம் கனகன்மேனியா குளம் பெரிய கேணி குளம் உள்ளிட்ட 59 குளங்களில் மழைநீர் நிறைந்து காணப்படுகிறது.
தற்போது குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு மற்றும் புத்துயிர் காரணமாக குளங்களின் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,139 குளங்கள் உள்ளன. இவற்றில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக அண்மையில் அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்களில் உள்ள நீர்இருப்பு குறித்து நீர்வள ஆதாரத் துறை தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1,832 குளங்களில் 99 சதவீதம் நீர் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications