Schools Reopen: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘டபுள்’ மடங்கு அதிகரித்த மாணவர் சேர்க்கை!
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

இதனிடையே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 14 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கியது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, பெற்றோரிடம் பேசி, மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஊக்குவித்தனர்.
அதன் பலனாக, கடந்த ஆண்டை விட, இரண்டு மடங்கிற்கு மேல் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக எல்.கே.ஜி - யு.கே.ஜி வகுப்புகளில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications