சென்னை மாநகராட்சி சூப்பர் திட்டம்.. சின்னமலை பக்கத்துல.. ரெடியாக இருங்க மக்களே!
சென்னை சின்னமலை முதல் கவர்னர் மாளிகை வரை புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது
சென்னை: சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சூப்பர் திட்டத்தை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.விதவிதமாக சாப்பாடுகளை ஒரே இடத்தில் சாப்பிடலாம். அதுவும் சென்னை சின்னமலை முதல் கவர்னர் மாளிகை வரை.. இதற்காக அங்கு கட்டமைப்புகள் வேறுமாதிரி மாற்றப்பட உள்ளது.
சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தொடர்ந்து புட் ஸ்ட்ரீட் நடைமுறையும் கொண்டுவரப்பட உள்ளது. சென்னையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகளில்'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
இதன்படி அந்த பகுதியில் பஸ், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதாவது ஸ்மார்ட் போன்களில் இல்லாத விளையாட்டுகளான பம்பரம் விடுதல், கோலிக்குண்டு அடித்தல் போன்ற ஜாலியான விளையாட்டுக்களும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக விளையாடி இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.

சென்னை மக்கள்
சென்னை மக்களின் பொழுது போக்கு என்றா கடலில் காற்று வாங்குவது, மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது, பிடித்த ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது, தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது. இதுதான் பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. பூங்காக்கள் செல்வது, கடற்கரைக்கு செல்வது, ஷாப்பிங் செல்வது என ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனைகள் இருந்தாலும், சாப்பிடும் விஷயத்தில் சென்னையில் எல்லோருமே ஒன்று தான்.

சென்னை உலகம்
நள்ளிரவு ஒரு மணி, 2 மணி, அதிகாலை ஐந்து மணி, காலை 7 மணி, மாலை 4 மணி என எத்தனை மணிக்கு போனாலும் பிரியாணி கடைகளில் கூட்டம் அலை மோதும். சென்னையில் மக்கள் நள்ளிரவிலும் உணவகங்களில் அலைமோதுகிறார்கள். சாப்ட்வேர் பணிகளில் பலரும் இரவு நேரங்களில் வேலைபார்ப்பதால் இரவு உலகமும் பகல் உலகத்தைப்போலவே ஒரே மாதிரி தான் இருக்கிறது.

உணவு பிரியர்கள்
சென்னை மக்களுக்கு உணவுகளின் மீது அலாதி பிரியம். குறிப்பாக பிரியாணி மற்றும் பாஸ்ட் புட் வகை உணவுகளின் மீது அதீத காதலே இருக்கிறது. அதற்காக பல கிலோ மீட்டர் பயணம் செய்துசாப்பிடவும் தயாராக இருக்கிறார்கள். அண்ணா நகரில் இருப்பவர் ஓஎம்ஆர் வந்து சாப்பிடுவதும், துரைப்பாக்கத்தில் இருப்பவர் அண்ணாநகர் போய் சாப்பிடுவதும் இங்கு சர்வ சாதாரணம். உணவின் தரம் பிடித்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் போய் சாப்பிடுவார்கள் சென்னை மக்கள்,

சின்னமலை கவர்னர் மாளிகை
எனவே சென்னை மக்களுக்காக சூப்பர் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. விதவிதமாக சாப்பாடுகளை ஒரே இடத்தில் சாப்பிடலாம். அதுவும் சென்னை சின்னமலை முதல் கவர்னர் மாளிகை வரை.. சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தொடர்ந்து புட் ஸ்ட்ரீட் நடைமுறையும் கொண்டுவரப்பட உள்ளது. சென்னையில் முதல் முறையாக 20 கோடி ரூபாய் செலவில், Food Street அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரபலமான உணவுகள்
சென்னை சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை இரண்டு கிலோ மீட்டருக்கு உணவு சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க போகிறது. சின்னமலையில் சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த உணவு திருவிழாக்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications