கடலூருக்கு குட்நியூஸ்.. புதுச்சேரி டூ சென்னைக்கு இனி மரக்காணம் ரூட்டில் விர்ருன்னு போகலாம்.. அசத்தல்
சென்னை: மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. பலநாள் கோரிக்கை விடுக்கப்பட்டு காத்து கிடந்த நிலையில், கடலூர் டூ சென்னைக்கு நல்ல செய்தி வந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து தென் தமிழகம் மற்றும் வட தமிழக பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இருந்தாலும், நேரடியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.. விழுப்புரம் சென்று தான் போக வேண்டும்..

மயிலாடுதுறை: புதுச்சேரியில் இருந்து சென்னை செல்ல, விழுப்புரம், திண்டிவனம் என சுற்றிச்செல்ல வேண்டும். அதேபோல, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் செல்ல வேண்டும் என்றாலும் விழுப்புரம் போய், அங்கிருந்து கடலூர் வழியாக செல்ல வேண்டும்.
இதனால், காலமும், பணமும்தான் வீணாகிறது.. இதைத்தடுப்பதற்காகத்தான், ரூ.9,000 கோடி இதனை தவிர்க்க, கடந்த 2008ம் ஆண்டு, புதுச்சேரி வழியாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது புது தகவல் ஒன்று வந்துள்ளது.
வைத்திலிங்கம்: புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வெ. வைத்திலிங்கம், பாராளுமன்ற கூட்டத் தொடரில் பேசும்போது, சென்னையில் இருந்து மகாபலிபுரம், மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் மற்றும் நகரி - திண்டிவனம் - புதுச்சேரியை இணைக்கும் ரயில்வே பாதையின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்ல, புதுச்சேரி வழியாக திண்டிவனம் மற்றும் கடலூரை இணைக்கும் தனித்திட்டத்தை ரயில்வே பரிசீலித்து வருகிறதா? அப்படியானால், அந்த திட்டங்கள் என்னென்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
புதிய ரயில் பாதை: இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்து சொன்னதாவது: சென்னையிலிருந்து கடலூருக்கு மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாக இணைப்பதற்கான ஒரு புதிய ரயில் பாதை 179.28 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு 2670 கோடி ரூபாயாகும்.
இந்த திட்டத்திற்கு ஏற்கனவே, 2023 - 24 நிதியாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், ரயில்பாதையில் சில மாற்றங்களையும், புதுச்சேரி கடலூர் மார்க்கத்தில் இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு கேட்டிருக்கிறது.. அதனால், அந்த கோரிக்கையின் அடிப்படையில் திருத்தம் செய்யவும், இரட்டை ரயில்பாதை அமைக்கவும், அந்த செலவை மாநில அரசே ஏற்குமாறு கேட்டுக் கொண்டோம்.
இறுதிக்கட்ட ஆய்வு: ஆனால், புதுச்சேரி அரசு, இந்த செலவை ஏற்க முடியாத சூழலில் இருப்பதாக, கடிதம் மூலம் தெரிவித்துவிட்டது.. எனினும், ரயில்வே பாதை அமைக்க இறுதி கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, திண்டிவனம் - நகரி 185 கி.மீ நீளம் கொண்ட புதிய பாதை திட்டத்திற்கு ரூ.3631 கோடி செலவு ஏற்படும். மார்ச், 2023 வரை ரூ.697 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாலாஜா ரோடு முதல்- ராணிப்பேட்டை இடையேயான 6 கி.மீ.க்கு பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. தற்போது, 2023-24 நிதியாண்டில் ரூ.200 கோடி இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடம்: அதுமட்டுமல்ல, சென்னை கடலூர் இணைப்பு திட்டத்தில், புதுச்சேரி கடலூர் திட்டம் இணைத்து செய்யப்படும்.. புதிய வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்க முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications