சென்னை தினம்.. “அதான் மாத்தியாச்சுல”.. ஆளுநர் ரவி வெளியிட்ட வாழ்த்தால் சர்ச்சை!
சென்னை: இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் 'மெட்ராஸ் தினம்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 384-வது'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் சென்னையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னை தினத்தையொட்டி, அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் சென்னை தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'மெட்ராஸ்' தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்" என தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பிறகு, தமிழில் 'சென்னை தினம்' என்றே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மெட்ராஸ் எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி தமிழில் பேசி வருகிறார். பல மாதங்களாக தமிழ் கற்றுக்கொண்டு வரும் ஆளுநர் ரவி, தற்போது ஓரளவுக்கு தமிழை நன்றாகவே பேசி வருகிறார். அப்படி இருக்கும்போது, இன்று ஆளுநர் வெளியிட்டுள்ள பதிவில் 'மெட்ராஸ்' தினம் எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications