தலைநகரில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. சென்னையின் 16 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை
சென்னை: சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 1.27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியான நிலையில் சென்னையில் 14 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவுற்று இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு முன்பு சென்னையில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,62,245, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,41,144, இதர பிரிவினர் 1305 என மொத்தமாக 40,04,694 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்-க்கு பின், தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில், ஆண்கள் 12,47,690, பெண்கள் 13,31,243, இதர பிரிவினர் 743 பேர் உள்ளனர்.
இதில் SIR படிவம் திரும்பி பெறாதவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 1,56,555, இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 12,22,164, ஆப்செண்ட்களின் எண்ணிக்கை 27,328, இதர இனங்கள் 189 என மொத்தம் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 10,517 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 00,181 வாக்காளர்களும் உள்ளனர். அதிகபட்சமாக வேளச்சேரி சட்டசபை தொகுதியில் 1.27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ராயபுரம் தொகுதியில் 51,711 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள்
1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501
2.பெரம்பூர் தொகுதி - 97,345
3.கொளத்தூர் தொகுதி - 1,03,812
4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960
5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043
6.எழும்பூர் தொகுதி - 74,858
7.ராயபுரம் தொகுதி - 51,711
8.துறைமுகம் தொகுதி - 69,824
9.சேப்பாக்கம் தொகுதி - 89,241
10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981
11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287
12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824
13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228
14.தியாகராயநகர் தொகுதி - 95,999
15.மயிலாப்பூர் தொகுதி - 87,668
16.வேளச்சேரி தொகுதி - 1,27,521
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications