300 டன் தீபாவளி குப்பை.. சென்னையில் பரிதாப நிலை.. இரவு முழுக்க விடாமல்.. கூட்டிய தூய்மை பணியாளர்கள்
சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் இடைவிடாமல் பட்டாசு கழிவுகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
பொதுவாக, தீபாவளி என்றாலே குதூகலம்தான். அதிகாலையில் எண்ணெய் குளியல், புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடித்தல், பலவித இனிப்புகள், இட்லி மட்டன் குழம்பு என அனைத்தும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்
அதே சமயம் பொங்கல், பூஜை போல இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று மாசு மற்றும் குப்பைதான். தீபாவளியில் வெடி வெடிப்பதால் அதிக அளவு புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படும். அதேபோல் கடுமையான சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்கள், வயதானவர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.
இவை அனைத்தையும் கடந்து, மிக அதிக அளவில் சேரும் குப்பைகளால் சாலைகள் மோசமான காட்சியை அளிக்கும். அதன்படி, நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுக்க பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய இந்த சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல இடங்களில் குவிந்திருக்கும் குப்பைகளை கையால் அள்ளி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்துகின்றனர்.
குப்பைகளை அகற்றும் பணிகள்
பட்டாசு காகிதங்கள் தெருக்களை நிறைத்து, சாலைகளை குப்பைக் கடலாக மாற்றியுள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. மாநகராட்சி கணக்குப்படி, மொத்தம் 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு வரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. இதற்காக மட்டும் 19,600 தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்த ஆண்டும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது. முக்கியமாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் காற்று மாசு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளது.
காற்றின் தரக்குறியீடு
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு (AQI) 250-க்கு மேல் பதிவாகியுள்ளது. இது மிக மோசமான நிலை. நீண்ட காலத்திற்கு இந்த காற்றை சுவாசிப்பது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 301-ஐ எட்டியுள்ளது, இது "மிகவும் ஆரோக்கியமற்ற" நிலையாகும். நீண்ட காலம் இந்த காற்றை சுவாசித்தால் சுவாச நோய்கள் ஏற்படலாம். பெருங்குடியில் 231 மற்றும் செங்கல்பட்டில் 242 ஆகப் பதிவாகியுள்ளது, இவையும் ஆரோக்கியமற்ற நிலைகளே. நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம். புதுச்சேரியில் 243, மதுரையில் 132 ஆகப் பதிவாகியுள்ளது. பாட்னா (405), நொய்டா (402), டெல்லி (359), கொல்கத்தா (355) ஆகியவை மற்ற முக்கிய நகரங்களின் தற்போதைய காற்று மாசு அளவுகள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications