தமிழக சட்டசபை தேர்தல் - உதயநிதி உட்பட சென்னை டான் பாஸ்கோ பள்ளி முன்னாள் மாணவர்கள் 7 பேர் போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி முன்னாள் மாணவர்கள் 7 பேர் களம் காண்கின்றனர்.
சட்டசபை தேர்தல் களம் ஒவ்வொரு நாளும் சுவராசியமானதாகவும் பரபரப்பாகவும் இருக்கிறது. தற்போதைய தேர்தலில் சென்னை டான்பாஸ்கோ பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 7 பேர் களம் காணுகின்றனராம்.

எந்த கட்சிகள்?
இவர்களில் 3 பேர் திமுக வேட்பாளர்கள்: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் 2 பேர்; காங்கிரஸ் மற்றும் அதிமுகவில் தலா ஒருவர்.

உதயநிதி உள்ளிட்ட 3 பேர்
திமுகவில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி டான்பாஸ்கோ முன்னாள் மாணவர். அதேபோல் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் வெற்றியழகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் எழிலன் நாகநாதன் இருவரும் கூட டான்பாஸ்கோ முன்னாள் மாணவர்கள்தான்.
Recommended Video

மநீம வேட்பாளர்கள்
மாதவரம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ரமேஷ் கொண்டல்சுவாமியும் டான்பாஸ்கோ முன்னாள் மாணவர். டி.எல்.எப். நிறுவனத்தின் தென்பிராந்திய தலைவராக இருந்தவர். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் ராஜா குமார் டான் பாஸ்கோ முன்னாள் மாணவர்தான்.

மனோஜ் பாண்டியன்
ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனும் இந்த பள்ளியில்தான் படித்தவர். ஶ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அமித்ரராஜும் டான் பாஸ்கோ முன்னாள் மாணவர்தான்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications