சென்னையே வியந்துடுச்சு.. மீண்டும் வருகிறது "டபுள் டக்கர் பஸ்".. ஞாபகம் இருக்கா இந்த மாடி பேருந்துகளை?
சென்னை: சென்னை மக்களுக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளது தமிழக அரசு.. விரைவில் டபுள் டக்கர் பஸ் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்பெல்லாம் டபுள் டக்கர் பஸ் என்றாலே சென்னைவாசிகளிடம் படுபேமஸ்.. இரண்டடுக்கு பேருந்துகள் எனப்படும் டபுள்டக்கர் பஸ், மாடிப்பேருந்துகள் என்றும் சொல்வார்கள்..

நல்ல வரவேற்பு: குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த பஸ்ஸூக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த 1997ல் இந்த டபுள் டக்கர் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது.. மின் கம்பிகள் இல்லாத, மரங்கள் தாழ்வாக இல்லாமல் இருக்கும் சாலைகள் எங்குள்ளது என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு பிறகே டபுள் டக்கர் பஸ்கள் விடப்பட்டன.. இதற்கு மக்கள் வரவேற்புகளை தந்ததுடன், நிறைய சினிமாக்களில் காட்சிகளாக இந்த டபுள் டக்கர் பஸ் இடம்பெற்றதால், கூடுதல் மவுசு எகிறியது.ஆனாலும், இந்த பஸ்ஸை இயக்குவதில் ஒரு சிக்கல் எழுந்தது.. அதிகபட்சமாகவே இந்த வகை பஸ்கள், 50 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும்.. அதற்கு மேல் ஓட்டினால் கவிழ்ந்து விடும் அபாயம் இருந்தது. மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், டபுள் டக்கர் பஸ் சேவையை தொடர முடியாமல் போனது.. எனவே, 2008-லேயே இந்த பஸ்ஸின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
என்ன காரணம்: சென்னை மட்டுமல்லாமல், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அங்கேயும் இதே சிக்கல்கள் எழுந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் இந்த பஸ்ஸின் சேவையை சென்னையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறதாம்..
இதற்கான பேச்சுவார்த்தையும் ஆரம்பமாகி உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. ஆனால், சென்னையில் எதன் அடிப்படையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை இயக்குவது என்றும் சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வரலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. எனினும், இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
மீண்டும் சேவை: கார்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகி விடுகிறது.. எனவே, போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. அதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவோரை தடுக்க முடியாது என்பதால்தான், பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.
அந்த வகையில், டபுள் டக்கர் பஸ்கள், போக்குவரத்து நெரிசலை தடுக்க தற்காலிக தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. முழுமையான குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். சாதாரண பஸ்கள் பயன்படுத்தும் பரப்பளவையே இந்த பஸ்ஸும் எடுத்துக்கொள்ளும்.. ஆனால் இரண்டடுக்கு பஸ்களில், இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்கலாம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் குறையும். வருமானமும் இரட்டிப்பாகும் என்று நம்பப்படுகிறது.
குஷி: மறுபடியும் டபுள் டக்கர் பஸ் வரப்போவதாக தமிழக அரசு சொல்லியுள்ளது, சென்னைவாசிகளை குஷியில் ஆழ்த்தி வருகிறது.. அதே வரவேற்பு மீண்டும் இந்த பஸ்ஸுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications