சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு
சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை: சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (11.03.2023) அன்று சென்னையின் அனைத்து மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கெண்டு குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ. பரப்புகொண்டதாகும். இந்த நகரம் நிர்வாக வசதிகளுக்காக 15 மண்டலங்களாகவும், 200 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் குடிநீர் வழங்கும் சேவை, கழிவுநீர் அகற்றும் சேவையை சென்னை குடிநீர்வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநகரில் மொத்தம் 12 லட்சத்து 68 ஆயிரத்து 132 சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. இவர்கள் நாளை சென்னை குடிநீர் வடிகால் வாரிய கூட்டத்தில் கலந்து கொண்டு சந்தேகங்களை தீர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கூட்டம்
சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 11.03.2023 (சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

முக்கியமான கூட்டம்
திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளரசவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டல அலுவங்களில் குடிநீர் வாரிய அலுவலகங்களில் நாளை கூட்டம் நடைபெற உள்ளது.

குடிநீர் இணைப்பு
இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளங்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு சென்னை குடிநீர்வாரியம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

உரிமையாளர்கள்
புலம்பும் வீட்டு உரிமையாளர்கள்.. என்ன பிரச்சனை.. சென்னையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. ஒவ்வோர் அரையாண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரி செலுத்த வேண்டும். 15-ம் தேதிக்கு மேல் செலுத்தாவிட்டால், அந்த தொகைக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. நீண்டகாலம் வரி செலுத்தாத சொத்து உரிமையாளரிடமிருந்து, பொருட்களை ஜப்தி செய்வார்கள். அந்த வகையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தற்போது வீடு வீடாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

ஜப்தி நோட்டீஸ்
இதனிடையே இதுபற்றி சென்னையில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர் கூறும் போது, பலர் லட்சக்கணக்கில் வரி நிலுவை வச்சிருக்காங்க.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுமார் ரூ.500 நிலுவை வைத்திருப்போர் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று நோட்டீஸ் கொடுத்திருங்காக. சென்னையில் சில இடங்களில் குழாய் பதித்தும் குடிநீர் இன்னமும் வரவில்லை இப்படியான நிலையில் 500 பாக்கி வைத்திருப்பவர்களை எல்லாம் தொந்தரவு செய்து சரியானதல்ல என்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications