விருகம்பாக்கத்தில் விஜய் டிரைவர் மகன் வெல்வாரா? வில்லிவாக்கத்தில் ஆதவ் சாதிப்பாரா? தந்தி டிவி சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்தை கடந்த முறை திமுக கூட்டணியே வென்ற நிலையில் இந்த முறை 16 தொகுதிகளையும் மொத்தமாக அள்ள போவது யார் என்பதை தந்தி டிவியின் கருத்து கணிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Chennai Election Survey 2026

ஆர்.கே நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திருவிக நகர் (தனி)
எழும்பூர் (தனி)
ராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தி.நகர்
மயிலாப்பூர்
வேளச்சேரி

இந்த 16 தொகுதிகளில் இரு தனி தொகுதியும் மீதம் 14 பொது தொகுதிகளாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணியே 16 தொகுதிகளையும் கொத்தாக அள்ளின. இந்த முறை யார் வெல்வார்கள் என்பது குறித்து தந்தி டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.

தந்தி டிவி சார்பில் மார் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் திமுக கூட்டணி 98 இடங்களிலும் அதிமுக கூட்டணி 91 இடங்களிலும் வெல்லுமாம். 47 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் இந்த 47 தொகுதிகளின் வெற்றியை பொறுத்தே யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரிய வரும்.

சென்னையின் விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியை பார்க்கலாம். இங்கு திமுக சார்பில் பிரபாகர ராஜா, அதிமுக சார்பில் விருகை ரவி, நாதக சார்பில் சந்தோஷ், தவெக சார்பில் சபரிநாதன் (விஜய்யின் டிரைவர் மகன்) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திமுகவுக்கு 31- 37 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 29 சதவீதம் - 35 சதவீதம் பேரும், தவெகவுக்கு 26 சதவீதம் முதல் 32 சதவீதம் பேரும் நாதகவுக்கு 1 முதல் 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த தொகுதியில் யார் வெல்வார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது.

திமுக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுக வேட்பாளர் மீது வயதை காரணம் காட்டுகிறார்கள். இங்குள்ள சினிமா நடிகர், நடிகைகள் தவெகவுக்கு வாக்களிக்க போகிறார்களாம். இன்னொரு செட் அதிமுக அல்லது திமுகவுக்கு செல்லும். இது கடும் போட்டிதான் ஆனால் இதில் பலனடைய போவது திமுகதான் என கணிப்புகள் சொல்கின்றன.

சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், அமமுக சார்பில் செந்தமிழன், நாதக சார்பில் ஸ்ரீவித்யா, தவெக சார்பில் அருள் பிரகாசம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திமுகவுக்கு 31 முதல் 37 சதவீதம் பேரும் அமமுகவுக்கு 27 முதல் 33 சதவீதம் பேரும், தவெகவுக்கு 27 முதல் 33 சதவீதம் பேரும் நாதகவுக்கு 2 முதல் 8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இங்கு திமுக வெல்ல வாய்ப்பிருக்கிறதாம்.

திநகர் தொகுதியில் திமுக சார்பில் ராஜா அன்பழகன், அதிமுக சார்பில் சத்திய நாராயணன், நாதக சார்பில் அனுஷா, தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இங்கு அதிமுகவுக்கு 33 சதவீதம் முதல் 39 சதவீதம் வாக்குகளும் திமுகவுக்கு 30 சதவீதம் முதல் 36 சதவீதம் வாக்குகளும் தவெகவுக்கு 25 சதவீதம் முதல் 31 சதவீதம் வாக்குகளும் நாதகவுக்கு 1 முதல் 5 சதவீதம் வாக்குகளும் பெறும் என்கிறார்கள். திநகர் இந்த முறை அதிமுக வசம் செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சத்யா இந்த முறை வெல்ல வாய்ப்பிருக்கிறதாம். இங்கு திமுக வெல்லாததற்கு காரணம் தவெக பிரிக்கும் ஓட்டுகள், பாஜகவின் ஓட்டுகள் அதிமுகவுக்கு விழும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அதிமுக சார்பில் எம்.கே.அசோக், நாதக சார்பில் கீர்த்தனா, தவெக சார்பில் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இங்கு அதிமுகவுக்கு 31%- 37% ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 28% - 34 % ஆதரவும் தவெகவுக்கு 27% முதல் 33 % வரை ஆதரவும் நாதகவுக்கு 1 முதல் 6 சதவீதம் ஆதரவும் இருக்கிறதாம்.

இந்த தொகுதியில் அதிமுகவுக்கு சாதகம் இருக்கிறது. இந்த தொகுதியில் அசோக் மிகவும் பிரபலம், இங்கு பாஜகவுக்கும் பாமகவுக்கும் வாக்குகள் இருக்கின்றன.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாதக சார்பில் ரோஷிணி, தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் போட்டியிடுகிறார். திமுகவுக்கு 34%- 40%, தவெகவுக்கு 31 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை ஆதரவு பெறும். அதிமுக 21 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையும் நாதகவுக்கு 1% - 6 % வரையும் ஆதரவு பெறும். இந்த திமுக வெல்லும். தவெகவின் ஆதவ் அர்ஜுனா 2ஆவது இடம் பெறுகிறார்.

துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் சேகர்பாபு, அதிமுக சார்பில் மனோகர், நாதக சார்பில் செரிப், தவெக சார்பில் சினோரா அசோக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திமுக 35-41%, அதிமுக 32%-38%, தவெக 18%- 24%, நாதக 1%- 7% ஆதரவு உள்ளது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் எழிலன், அதிமுக சார்பில் பா.வளர்மதி, நாதக சார்பில் நடிகர் களஞ்சியம், தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திமுகவுக்கு 3 முதல் 37 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 28 - 34 சதவீதம் பேரும் தவெகவுக்கு 26 முதல் 32 சதவீதம் பேரும் நாதகவுக்கு 1 முதல் 7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இங்கு திமுக வேட்பாளர் வெல்ல வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+