மெட்ரோவை கையில் பிடிக்க முடியாது போலயே.. வேலையை தொடங்கிய CMRL.. அடியோடு மாறும் மின்சார ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) MRTSன் மின்சார ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளது. பயணிகள் இந்த முயற்சிகளை வரவேற்றுள்ளனர். நிலையங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

MRTSன் மின்சார ரயில் நிலையங்களை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தாகும் முன், அதற்கான பணிகளை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது ஒப்பந்தத்தை பின்னர் செய்யலாம், நாங்கள் பணிகளை தொடங்குகிறோம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகளை தொடங்கி உள்ளது.

metro

மெட்ரோ உடன் இணையும் சென்னை பறக்கும் ரயில்

நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த இணைப்பிற்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி MRTS வழித்தடம் வரை அனைத்தும் CMRL வசம் வரும். புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இன்னும் கையெழுத்து ஆகவில்லை. இருப்பினும், CMRL நிலையப் பணிகளைத் தொடங்கியது. இது பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படுகிறது.

மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கும். CMRL அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க திட்டம் உள்ளது. மேலும், பராமரிப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களையும் வகுக்கிறது. நிலைய உள்கட்டமைப்பு ஆய்வுக்கு ஆலோசகர் நியமிக்கப்படுவார். CMRL விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும்.

CMRL - MRTS நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள்

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம், ஆலோசகரைத் தேர்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காத்திருக்க விரும்பவில்லை. இந்த நேரத்தில், நிலையங்களை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த ஆய்வறிக்கையை தயாராக வைத்திருக்க முடியும். இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மூன்று மாதங்களுக்குள் ஆலோசகரிடமிருந்து ஆரம்ப அறிக்கை கிடைக்கும், என்று தெரிவித்து உள்ளது.

ஆலோசகர் அறிக்கை கிடைத்ததும், புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். CMRL சீரமைக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்யும். MRTS நிலையங்கள் பெரியவை, பணிகள் பகுதி பகுதியாக பிரிக்கப்படும். அதிகப் பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்படும். அங்கு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், சென்னை எம்.ஆர்.டி.எஸ் (பறக்கும் ரயில்), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவதற்கான சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். இந்த நடவடிக்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எம்.ஆர்.டி.எஸ். தொடர்பான முக்கிய அறிவிப்பு

சென்னையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்குவார்கள்.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த மாற்றம் நிகழும். இந்த நடவடிக்கையின் மூலம், ரயில் சேவைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) பறக்கும் ரயில் (MRTS) இணைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இணைப்பு

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 90% பணிகள் நிறைவடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னக ரயில்வே இந்த திட்டத்தை காலதாமதப்படுத்திய நிலையில், தற்போது பிரதமர் அலுவலகம் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது அளித்த மனுவில், சென்னை பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி தென்னக ரயில்வேயின் தாமதத்தைக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+