ரூ.5 ஆயிரத்துக்கு டிபன்,பிரியாணி விருந்துடன் உல்லாசம்.. 'சென்னையில் தலைதூக்கும் குடும்ப விபசாரம்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மீண்டும் குடும்ப விபசார தொழில் தலை தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வளசரவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் குடும்ப விபசார தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்க, இந்த தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.

குடும்ப விபசாரம் என்றால் என்ன? ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி விபச்சாரம் அனுபவித்தபடி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பார்களாம். இதுதான் 'குடும்ப விபசாரம் என்று கூறுகிறார்கள்.

Chennai family Prostitution with tiffin and biryani feast for Rs.5000

இந்நிலையில் சென்னை நகரில் இந்த மாதிரியான 'குடும்ப விபசாரம்' மீண்டும் தலைதூக்கி உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக வளசரவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் இந்த மாதிரி குடும்ப பெண்களால் விபச்சாரங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு வேலை தேடி வருவது போல் குடும்ப பெண்கள் சிலர் சென்னை வருவார்கள். அவர்களின் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும்.இவர்கள் இங்கு வேலை தேடுவது போல் வந்து வீடு எடுத்து தங்குவார்கள். அந்த வீட்டில் விபச்சாரத்தை சத்தமில்லாமல் செய்வார்கள். நன்றாக சம்பாதித்துவிட்டு ஊருக்கு போய்விடுவார்கள். மீண்டும் வந்து இதேபோல் செய்வார்கள்.

ஒருவேளை போலீசிடம் பிடிப்பட்டால், சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, அரசின் காப்பங்களிலேயே தங்கி இருப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்ற பின் செந்த ஊருக்கு போவார்கள். அப்படி போனவர்கள் சில மாதங்களிலேயே மீண்டும் வந்து இதேபோல் குடும்ப விபச்சாரத்தை செய்வார்களாம்.

சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடந்து வருவது குறித்து அண்மையில் விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்தார்கள்.

இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போது,அங்கு ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.. பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்.

மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து 'குடும்ப விபசார'த்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான தரகர்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+