Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோன் 1.75 கோடி வாங்கிய அன்னபூர்ணி.. சென்னை பேங்க்கில் ஜிம் மாஸ்டர் தம்பதி செய்த காரியம்.. இப்படியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் பெருகி வருவதால், அவைகளை பயன்படுத்தி மோசடிகளும் அதிகமாகிவிட்டன.. சில மர்மநபர்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் இறங்கி, அப்பாவிகளின் பணத்தையும் அபகரித்து விடுகிறார்கள்..
இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளுக்கு காவல்துறையும் பல்வேறு கடிவாளங்களை போட்டு, கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக வங்கிக்கடன் மோசடி குறித்து பலமுறை பொதுமக்களை அலர்ட் செய்துள்ளது.. எனினும் மோசடிகள் தொடர்கின்றன.. இப்போதும் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வங்கி கடன் பெற்று தருவதாக பல விளம்பரங்கள் வருவதை பார்த்து, அப்பாவி மக்கள் ஏமாந்து போகிறார்கள்.. எனவேதான், மோசடிகளைத் தவிர்க்க, நிதி நிறுவனங்களின் பெயரில் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குப் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியவாறே உள்ளது.

Bank Loan Chennai Annapoorani

வங்கி கடன் மோசடி

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் நம்பவும், கடன் செயலிகளைப் பதிவிறக்கும் முன்பு அவற்றை சரிபார்க்கவும், மேலும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி அல்லது காவல்துறையிடம் புகாரளிக்கவும் தொடர்ந்து கேட்டு கொண்டவாறு உள்ளது.

சமீபத்தில்கூட போலீசார் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.. அதில், "சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் உடனடி கடன் தருவதாக பல விளம்பரங்கள் வருகிறது.

காவல்துறை - வங்கிக்கடன்

அதை நம்பி, கடன் பெறுவதற்கான செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால், சைபர் மோசடி கும்பல், செயலி மூலம் உங்களுடைய புகைப்படம் மற்றும் மொபைல் எண்களை திருடி விடுகின்றனர்.

பிறகு, தவணை தொகை செலுத்தும் தேதிக்கு முன், தங்களை மர்மநபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, கடன் பெற்ற தொகையை விட அதிக தொகையை இன்றே கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். அப்படி கட்டவில்லையானால் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுகின்றனர்.

இதுபோன்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் 400க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சைபர் மோசடி கும்பல் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது தெரிய வந்ததுள்ளது.

போலீசார் எச்சரிக்கை

ஆகையால் பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டால், சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; கடன் பெற வேண்டாம்

சைபர் கிரைம் சம்பந்தமான புகார் அளிக்க 1930, 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதோ இப்போது சென்னையில் என்ன நடந்தது தெரியுமா? சென்னை: திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த 50 வயது சீனிவாசன், தன்னுடைய மனைவி அன்னபூரணியுடன் இணைந்து அண்ணாநகர் உள்பட சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்கள் நடத்தி வருகிறார்.

பெண்ணுக்கு ஆசை வார்த்தை

இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜிம்மின் மேலாளராக திருவல்லிக்கேணியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த பெண்ணிடம் ஒருநாள் ஜிம் ஓனர் சீனிவாசன், "உன்னுடைய பெயரிலேயே தனியாக ஜிம் ஒன்றை அமைத்து தருகிறேன்" என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளார்.

உடனே அந்த இளம்பெண்ணும், புது ஜிம்முக்கு ஆசைப்பட்டு, தன்னுடைய ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தந்துள்ளார்.. அவைகளை பெற்றுக்கொண்ட ஜிம் ஓனர்சீனிவாசன், பாரிமுனையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், பெண் மேலாளர் பெயரில் ரூ.1.75 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு எந்த உடற்பயிற்சி மையமும் அமைத்து தரவில்லை.

ஜிம் தம்பதி

அதுமட்டுமல்ல, வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத தவணையும் கட்டவில்லை. இதனால் பதறிப்போன அந்த பெண் மேலாளர், சீனிவாசனிடமும், மனைவி அன்னபூரணியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் 2 பேருமே இதை கண்டுகொள்ளவில்லையாம்..

அப்போதுதான் தம்பதியால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த அந்த இளம்பெண் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.

உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீனிவாசனும், அன்னபூரணியும் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, இளம்பெண்ணையும், அவரது அம்மாவையும் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இளம்பெண்ணை மிரட்டிய ஓனர்

பிறகு அந்த இளம்பெண் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சீனிவாசன், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் நடத்தினார்கள்.

அப்போதுதான், பல பகீர் தகவல்கள் வெளியாகின..அதாவது சென்னையில் பல இடங்களில் ஜிம் ஆரம்பித்து, அங்கு வரும் கஸ்டமர்களிடம் ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் வரை சீனிவாசன் வசூலிப்பாராம். வெறும் 2 மாதம் மட்டுமே பயிற்சி அளித்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்தை நவீனமாக்க போவதாக சொல்லி மூடிவிடுவாராம்.

மூளையாக செயல்பட்ட அன்னபூரணி

இப்படியே பல இடங்களில் பணமோசடி செய்துள்ளது அம்பலமாகியிருக்கிறது.. அதுமட்டுமல்ல, கைதாகி உள்ள சீனிவாசன் மீது மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால், கணவன் சீனிவாசன் போலீசில் கைதாகிவிட்டதுமே, அன்னபூரணி தலைமறைவாகி உள்ளார்.. சீனிவாசனுக்கே மூளையாக செயல்பட்டவர் அன்னபூரணி என்பதால் அவரையும், இதில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+