Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரண்ட் பில் கட்டிட்டீங்களா? மின்சார வாரியம் போன "சென்னை" கோரிக்கை.. ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை புயல் தாக்கிய நிலையில், இன்னும் பலருக்கு மின்சாரம் கிடைக்கப்பெறாத நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை மழை புரட்டி போட்டுவிட்டு சென்றிருப்பதால், நிலைமை முழுமையாக சீராகவில்லை.. பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஒவ்வொரு இடமாக பழுதுபார்த்து மின் இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன. மின் பாதைகளை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

Chennai Flood: Chennai People Request for time for payment of Current bill to Tamil Nadu Electricity Board

மழை: சென்னையில் 1877 பாதைகளில் 1203 பாதைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வேளச்சேரியிலும் கூட ஒரு பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது..

ஆனால், மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் பகுதிகள் மின் விநியோகம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் இருக்கும் பகுதிகளில் மின்சாரம் வழங்கினால் வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதாலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

துண்டிப்பு: பெரும்பாலான இடங்களில் மக்களின் பாதுகாப்பு கருதியே மழை நீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றாலும், சென்னையில் தாழ்வான பகுதிகளில், அதுவும் புறநகர்ப் பகுதிகளில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது... இதில், தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் பகுதிகளில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது.. அந்தவகையில், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.. அதற்கு பிறகு அபராதத்துடன் சேர்த்து கரண்ட் பில் கட்டியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.

அவகாசம்: அந்தவகையில், இந்த மாதம் 4ம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்த கடைசி நாளாக உள்ளவர்கள், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்..

இதில், பலபேருடைய பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியாத நிலையில் உள்ளதால், மின் இணைப்புடன் சேர்த்து, அவகாசமும் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து மின்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் முறை இதுதான்:

TANGEDCO என்று சொல்லப்படும் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷனின் பிரத்யேக வெப்சைட்டை உருவாக்கியிருக்கிறது.

- TANGEDCO-வின் என்ற இந்த வெப்சைட்டிற்குள் முதலில் சென்று, அங்கிருக்கும் "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- ஆன்லைன் சர்வீஸின் கீழே, மொத்தம் 5 ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இதில், "ஆன்லைன் பில் பேமென்ட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது ஸ்கிரீனில், நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்து உங்களிடம் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் இருந்தால், அவைகளை பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம். (ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் ஆன்லைன் பேமெண்ட் செய்வதற்காக புதிதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக, குவிக் பே (Quick Pay) என்ற ஆப்ஷனை பயன்படுத்தியே, ஒவ்வொரு முறையும், கரண்ட் பில் கட்டிக் கொள்ளலாம்)

- இப்போது ஸ்கிரீனில், வலது பக்கம் "குவிக் பே" என்ற ப்ளூ கலர் பட்டனை கிளிக் செய்தால், இன்னொரு ஸ்கிரீன் தோன்றும். அதில் உங்களது, கரண்ட் பில் கட்டணத்துக்கான, கஸ்டமர் நம்பரை பதிவிட வேண்டும்.

- இப்போது ஸ்கிரீனில் தரப்பட்டிருக்கும் Captcha நம்பர்களை டைப் செய்து SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது, உங்கள் வாடிக்கையாளர் எண், உங்களுடைய பகுதி, மின் கட்டணத்திற்கான தொகை, கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று அனைத்து விபரங்களும் ஸ்கிரீனில் தோன்றும்.

நீங்கள் கரண்ட் பில்லை செலுத்த, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கியூ ஆர் கோட், யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் முறைகளையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்ல, TANGEDCO வெப்சைட் மட்டுமல்லாமல் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற மற்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமும் கரண்ட் பில் கட்ட முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+