மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்.. தலா ரூ.1000 அல்லது 2,000 ரூபாய்.. அரசு பரிசீலனை?
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இப்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை புரட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
சென்னையில் சனிக்கிழமை ஒரே நாளில் 207 மிமீ மழை வரை பெய்தது. ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லேசாக குறைந்த மழை இன்று காலையில் இருந்து மீண்டும் தீவிரம் எடுத்துள்ளது..

சென்னை
2015க்கு பின் சென்னையில் பதிவான மிக அதிக மழை இதுதான். சென்னையில் 2015ல் பெய்தது போல, சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதிப்பு
முக்கியமாக வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் பல நீரில் மூழ்கி உள்ளன. பல்வேறு குடும்பங்கள் இதனால் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு உணவு, போர்வை, மாஸ்க், பிஸ்கட், மருத்துவ உபகரணங்களை வழங்கி அரசு தற்காலிக நிவாரணம் அளித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

நிவாரணம்
இந்த நிலையில்தான் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2,000 ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 5,000 நிவாரண தொகை செலுத்தப்பட்டது.

எவ்வளவு வழங்கப்படும்?
தற்போது ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, கள நிலவரங்களை தெரிந்து உள்ளார். அவரிடம், நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, ரேஷன் கார்டு அடிப்படையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

பரிசீலனை
சென்னை முழுதும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் தான் உள்ளனர். ஒவ்வொரு பகுதி வாரியாக, பாதிக்கப்பட்டவர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால், இன்னும் அந்த பணி முடிவடையவில்லை. ஒட்டுமொத்த விபரங்கள் சேகரித்த பின், நிவாரண தொகை குறித்து இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் முடிவு
இதனால் இன்னும் சில நாட்களில் எந்த வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. நிவாரண தொகை வழங்கபடுமா அல்லது ரேஷன் பொருட்களாக வழங்கப்படுமா, யாருக்கெல்லாம் நிவாரணம் பொருந்தும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications