சென்னையில் இரவு முழுக்க பெய்த பேய் மழை.. இன்னும் விடவில்லை.. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!
சென்னை: சென்னையில் இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போதும் மழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது.
Recommended Video
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. இன்று இந்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது.
இன்று மாலை காரைக்காலுக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.

சென்னை
சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

எங்கு பெய்தது
சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

லேசான மழை
மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மழையால் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல்தான் சென்னையில் மழை தீவிரம் எடுக்கும். பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

எங்கு எவ்வளவு
காலை 4.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. இந்த பகுதிகள்தான் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- செய்யூர் (சிஜிஎல்) - 79.0 மி.மீ
- மீனம்பாக்கம் - 96.0 மி.மீ
- குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (டிவிஎல்) - 105.5 மி.மீ
- எம்ஆர்சி நகர் - 131.5 மி.மீ
- திரூர் (டிவிஎல்) - 88.5 மி.மீ
- ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (கேஎன்சி) - 113.5 மி.மீ
- தரமணி - 119.0 மி.மீ
- கட்டப்பாக்கம் (டிவிஎல்) -91.0 மி.மீ
- மேற்கு தாம்பரம் - 83.5 மி.மீ
- சத்யபாமா பல்கலைக்கழகம் (கேஎன்சி) - 106.0 மி.மீ
- கயத்தார் (TTK) --48.5 மி.மீ
- ஆரணி (டிவிஎம்) -18.5 மி.மீ
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications