ரேஷன்தாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்.. சென்னை வீதிகளில் காலையிலேயே கூட்டம்.. பெருங்களத்தூரில் பரபர
சென்னை: நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று அதிகாலையிலேயே சென்னை வீதிகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.. அத்துடன், போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன்கள் தரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
4 மாவட்டங்கள்: இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும், இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசுஅறிவித்துள்ளது.

அந்தவகையில், நேற்றுகாலை முதல் டோக்கன்கள் விநியோகிக் கப்பட்டன... சென்னையை பொறுத்தவரை, 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது..
ரேஷன் கடைகள்: ஆனால், ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.. இதில், வடசென்னை பகுதியை பொறுத்தவரை, அதிகாலை 5 மணிக்கே வரிசையில் பொதுமக்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. சில பெரியவர்கள், அந்தந்த வீட்டின் சார்பாக வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
தெரு முழுக்க மக்கள் நின்றநிலையில், அடுத்த தெரு வரையிலும் வரிசை சென்றது.. விடிகாலையிலேயே மக்கள் காத்திருக்க துவங்கிவிட்டாலும், 8 மணிக்குதான் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்க துவங்கினர்.. ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சில ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.. போலீசாரும், வரிசையை ஒழுங்குப்படுத்தியவாறு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெருங்களத்தூர்: அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர், பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததை அறிந்து கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இதுபோன்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யாருக்கு நிவாரண தொகை கிடைக்குமோ, அந்த பயனாளிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்றும், பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்க துவங்கி உள்ளன.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications