பள்ளிக்கரணை கட்டிடம் அத்துமீறி இடிப்பு.. திமுக முன்னாள் கவுன்சிலரின் மருமகன் கைது.. மனைவி தலைமறைவு
சென்னை: சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் செந்தமிழ் என்பவர், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் 2-ம் தளத்தில் கழிவறை கட்டியுள்ளார். இந்நிலையில் இந்த கட்டிடம் தொடர்பாக பொதுவழிப்தை தொடர்பான தகராறு இருந்து வந்ததாம். இந்த சூழலில் திமுக முன்னாள் கவுன்சிலர் ரெங்கனின் மருமகன் ஜெய் என்பவர் கட்டிடத்தை இடித்து நிலத்தை அபரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வீடு, நிலம் வாங்கும் போது, பொதுப்பாதை உள்ளதா, கட்டுமானத்தில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதை நன்கு விசாரித்து வாங்க வேண்டும். சிலர் மொத்த இடத்திலும் வீடு கட்டுவார்கள். பொதுப்பாதை என்று உள்ள பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் கழிவு நீர்வாய்க்கால்கள் செல்ல பொதுப்பாதை உள்ளதா அல்லது அடுத்தவர் நிலத்தின் வழியாகவே செல்ல வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் சிக்கல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். எனவே சிறுசிறு விஷயங்களை கூட கவனமாக பார்க்க வேண்டும். பத்திரம் மட்டுமின்றி, பட்டாவும் உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்க வேண்டும். அதுவும் பள்ளிக்கரணை என்றால் கண்டிப்பாக பல முறை பார்க்க வேண்டும். அங்கு நடந்த ஒரு தகராறு பற்றி பார்ப்போம்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 41 வயதாகும் செந்தமிழ் என்பவர், தனக்கு சொந்தமான 200 சதுர அடி மனையில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள் கட்டி உள்ளார். தரை தளத்தில் சிப்ஸ் கடைக்கும், முதல் தளத்தில் கூரியர் நிறுவனத்துக்கும் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் இவர் தனது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் கழிவறையை கட்டி வந்தாராம்.
ஆனால் புதிதாக கட்டி வந்த கழிவறை கட்டுமானத்தை சிலர் அவர் இல்லாத நேரத்தில் சென்று இடித்து அகற்றி உள்ளனர். நேரில் சென்று பார்த்த போது, கழிவறை கட்டுமானங்கள் இடிந்து கிடந்தது. இதையடுத்து உடனடியாக செந்தமிழ், தனது இடத்தை சிலர் அபகரிக்க முயல்வதாக பள்ளிக்கரணை போலீசில் திமுக முன்னாள் கவுன்சிலரின் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளிக்கரணை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் அத்துமீறி நுழைத்து கழிப்பறை கட்டுமானத்தை இடித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மறைந்த முன்னாள் திமுக கவுன்சிலர் ரங்கனின் மருமகனான 33 வயதாகும் ஜெய் என்பவர் கைது செய்யப்பட்டார். பொதுவழிப்பாதை தொடர்பான தகராறு செந்தமிழுக்கும் மற்றொரு தரப்புக்கும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையில் கழிப்பறை கட்டுமானம் இடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கட்டிடத்ததை இடித்துவிட்டு தலைமறைவானதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி நீலா, மகள் சூர்யா, கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications