சென்னையில் முடங்கும் ஆட்டோ சேவை? எரிபொருள் இல்லாமல் திணறும் டிரைவர்கள்! பெங்களூரிலும் நிலைமை மோசம்
சென்னை: ஹார்முஸ் ஜலசந்தியில் வளைகுடா போர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வரும் எரிபொருள் மற்றும் கேஸ் சப்ளையும் முடங்கியுள்ளது. இதற்கிடையே சென்னை மற்றும் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல மணி நேரம் காத்திருந்தே கேஸை நிரப்பிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், இன்னும் சப்ளை செயின் முழுமையாகச் சீராகவில்லை. இதனால் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரவே செய்கிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியில் உள்ளனர். எரிபொருள் நிரப்பப் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். விலையும் உயர்ந்துள்ளதால் அவர்களின் தினசரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கில் ஆட்டோக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றன. மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளதால் தேவை அதிகமாக உள்ள பீக் ஹவரில் அவர்களால் சவாரியை எடுக்க முடிவதில்லை. இதனால் பல ஓட்டுநர்கள் வருவாயை இழக்கின்றனர். கேஸ் விலையும் கூட ஒரு கிலோ ரூ.76 என்பதில் இருந்து கிட்டத்தட்ட ரூ.100ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படுகிறது.
நீண்ட காத்திருப்பு, அதிகரித்த எரிபொருள் செலவு ஓட்டுநர்களைக் கடும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான கப்பல் போக்குவரத்து திரும்பாத சூழலில், எரிபொருள் சப்ளை மற்றும் விலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு பெட்ரோலியம் நிறுவனங்கள் விலையை உயர்த்தவில்லை என்ற போதிலும் நாயரா எனர்ஜி, ஷெல் இந்தியா போன்ற தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டனர்.
பொதுமக்கள்
இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதில்லை. பயணிகளும் கூட சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அதாவது பீக் ஹவரில் தேவைப்படும் நேரத்தில் ஆட்டோ கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனால் பயணிகள் ஒரு ஆட்டோவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அப்படியே ஆட்டோ கிடைத்தாலும் வழக்கத்தை விட அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி இது இரு தரப்பையுமே கடுமையாகப் பாதிக்கிறது.
பெங்களூர்
சென்னை மட்டுமின்றி பெங்களூரிலும் இதே நிலை தான்.. பெங்களூரில் ஆட்டோக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், சேஷாத்ரிபுரம், பசவேஸ்வரா நகர் உள்ளிட்ட எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள் எரிபொருளைத் தேடியே 10 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்க வேண்டி உள்ளது. ஹலசூரு, ஆடுகோடி, இந்திரா நகர் போன்ற பகுதிகளிலும் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெங்களூரில் ஒரு லிட்டர் எல்பிஜி விலை ₹59-லிருந்து ₹85 - ₹100 ஆக உயர்ந்துள்ளது. சில தனியார் நிலையங்கள் ₹115 வரை விற்கப்படுகிறது. கோடை விடுமுறை பள்ளி சவாரிகள் குறைத்ததால், பல ஓட்டுநர்கள் வழக்கமான பயணிகளை மட்டுமே நம்பி போராடி வருகின்றனர். அப்படியிருக்கும்போது நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பக் காத்திருப்பது அவர்கள் வருவாயைப் பாதிக்கிறது.
சிக்கல்
தனியார் எல்பிஜி நிலையங்களில் விலை ஏறிவிட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளுக்கு வருகிறார்கள். இதனால் கூட்டம் அங்கு அதிகரிக்கிறது. அதேநேரம் தற்போதைய சூழலில் அரசு பங்குகளில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications