சென்னை சிறுமி கொலை.. உயிரிழக்கும் வரை நடந்த கொடூர தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னை 15 வயது சிறுமி கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு நடந்த சித்ரவதைகள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, அமைந்தகரை மேத்தாநகர் பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாத் - நாசியா தம்பதி. இவர்கள் வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்தார். அந்த சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாவால் அவரை கவனித்துக் கொள்ள முடியவில்லை. குடும்பசூழல் காரணமாக சிறுமி முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அந்த அப்பார்ட்மென்ட் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் சர்புதின் என்பவர் அமைந்தகரை காவல்நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் சிறுமியின் உடல் அந்த வீட்டின் குளியலறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை தொடங்கியது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதில் உயிரிழந்த, சிறுமி கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் முகமது நிஷாத்தின் நான்கு வயது குழந்தையின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இதுதொடர்பாக முகமது நிஷாத் மற்றும் அவரின் மனைவி நாசியா மற்றும் அவர்களின் நண்பர் லோகேஷ், அவரின் மனைவி ஜெயசக்தி, வீட்டு பணிப்பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.
அதில் மேற்சொன்ன அனைவரும், கடந்த சில மாதங்களாகவே சிறுமியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. தீபாவளி நாளில் (31.10.2024) அவர்கள் சிறுமியை சித்ரவதை செய்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்திருக்கிறது.
சிறுமிக்கு பல்வேறு வகையில் சித்ரவதை கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. அயர்ன் பாக்ஸ் மற்றும் சிகரெட்டில் சூடு வைப்பது என்று கொடுமைப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக அவருக்கு விடுப்பு கொடுக்காமல், ஊருக்கும் அனுப்பாமல் டார்ச்சர் செய்துள்ளனர். தீபாவளி தினம் சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி அவரை தாக்கியுள்ளனர். அப்போது சிறுமி மயக்கமடைந்துள்ளார். பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
துர்நாற்றம் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் ஊதுபத்தியை பற்றிவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்தவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. ஆரம்பத்தில் அவர்கள் இதை மறுத்தனர். பிறகு ஒப்புக் கொண்டனர்.
சிறுமி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் நினைவு இழக்கும் வரை விடாமல் கொடூரமாக தாக்கியுள்ள தகவலும்வெளியாகியுள்ளது. இதனால் சந்தேக வழக்கை. கொலை வழக்காக மாற்றி, போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளை அதில் இணைத்தனர். தொடர்ந்து முகமது நிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, மகேஸ்வரி, சீமா பேகம் ஆகிய ஆறு பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்கள் ஆறு பேரையும் வருகிற 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications