இடித்து தள்ளப்படும் கட்டிடங்கள்.. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிரடி மாற்றம்.. 3 மாதம் தான்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை ஆக்கிரமிப்புகளை இடித்து 6 வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியினை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை சாலையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதே போல் கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதியிலும் சாலையேரங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனினும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கியதும் 3 மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது, இதற்கு நிலம் கையகப்படுத்துவது பணி நீண்ட காலமாக நடந்து வந்தது. அதிக நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருந்ததால் இவ்வளவு காலம் ஆனது.
கட்டிடங்கள் அகற்றப்பட்டதும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ள போகிறோம்ட. தற்போது கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. சாலையோரத்தில் உள்ள மரங்களும் அகற்றப்படும். கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி முதலில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையில் தான் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. அதேநேரம் அக்கரை முதல் மாமல்லபுரம் வரை சாலையை அகலப்படுத்திவிட்டது. அங்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக செல்ல முடிகிறது. திருவான்மியூர் டூ அக்கரை வரை பணிகள் முடிந்தால், பாண்டிச்சேரிக்கு மிக வேகமாக செல்ல முடியம்.
உண்மையில் இந்த பணிகள் முடிந்து சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டால் சென்னைக்கே பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். ஏனெனில் சென்னையில் இசிஆர் சாலைகள் விரைவுபடுத்தப்பட்டால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இந்த பணிகள் முடிந்து சாலை விரிவுப்படுத்தப்பட்டால் திருவான்மியூரில் இருந்து அக்கரைக்கு பீக் அவர்ஸில் வெறும் 20 நிமிடத்தில் போக முடியும். தற்போது பீக் அவர்ஸில் திருவான்மியூரில் இருந்து அக்கரை செல்ல (12 கிமீ ) 40 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.
அதே நேரம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக 5 ஆயிரத்து 434 ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
மாமல்லபுரம், கல்பாக்கம், கடம்பாடி, குன்னத்தூர், பெருமாள்சேரி, மணமை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் சாலை பணிக்காக சமன்படுத்தப்பட்டும், மழை நீர் செல்லும் இடங்களில் சிறிய பாலங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.
சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் இருந்த 500-க்கும் மேற்பட்ட மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. அத்துடன் இருவழிச்சாலை பகுதியில் மணல் கொட்டப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் குறுகிய தார் சாலை வழிப்பாதையில்தான் நாள்தோறும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications