கிளாம்பாக்கம் கிளம்பிட்டீங்களா.. பொத்தேரியின் ஸ்டேஷன் வாசல்ல பாருங்க.. ரயில் பெட்டி உணவகம்.. அசத்தல்
சென்னை: பொத்தேரி ரயில்வே ஸ்டேஷன் வாசலிலேயே புதிய ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.. இதனால் சென்னைவாசிகளின் கவனம் அங்கு வெகுவாக திரும்பி உள்ளது.
ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே கட்டணம் உயர்த்தப்படவில்லை..

கட்டணம் உயர்வு: அதற்கு பதிலாக, ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், அதேசமயம் வருவாயையும் ஈட்டுவதற்காகு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது... அந்தவகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த திட்டமிடப்பட்டது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் பொத்தேரி ஆகிய 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், சென்னை பொத்தேரி ஜிஎஸ்டி சாலையில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரெயில்வே அமைத்துள்ளது. 2,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள்தான் வெளியாகி உள்ளது.
புதிய பெயர்: 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.5 கோடி செலவில் உருவான இந்த ரயில் பெட்டி உணவகத்துக்கு என்.எச் 32 அதாவது "ரூட் 32" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில், பழைய ரயில் பெட்டிக்கு புதுவண்ணம் தீட்டப்பட்டுள்ளது.. ,
ரெயில் பெட்டி ஓட்டல் முழுவதுமே பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. உள்பகுதியில் மரபலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஜிஎஸ்டி சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், ரயில் பயணிகள் என அனைவருக்குமே இந்த உணவகம் பயனளிக்க போகிறது..
டிசைனிங்: இந்த உணவகத்தில் தென்னிந்திய உணவுகள், இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள், சீன உணவு வகைகளும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளதாம்.. அனைத்து வகையான சமையல்களும் தயாராவதால், தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து இதற்கெனவே சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொத்தேரியில் வசிப்பவர்களையும், ஜிஎஸ்டி சாலையில் செல்லும் பயணிகளையும் வெகுவாக கவரும் வகையில், பொத்தேரி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியிலேயே, அழகிய முறையில், ரெயில் பெட்டி போலவே இந்த ஓட்டல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.. வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இந்த ஓட்டல் இயங்க போகிறதாம்.
சிறப்பு: தெற்கு ரெயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள 2-வது ரெயில் பெட்டி உணவகம் இதுவாகம்.. இந்த உணவகத்தில் பயணிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக, மர பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.. அதேபோல கிரானைட் டேபிள்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர சோபாக்களும் போடப்பட்டு உள்ளன.
இந்த அமைப்பை பார்க்கும்போது, இந்த ரெயில் பெட்டி உணவகம் வாடிக்கையாளருக்கு அசல் ரெயில் பெட்டியின் உணர்வை வழங்குவது போலவ இருக்கிறதாம். காட்டாங்கொளத்தூரில் மேலும் ஒரு ரெயில் உணவகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கவனம் : இதில் ஹைலைட் என்னவென்றால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இப்போது திறக்கப்பட்டு விட்டதால், பொத்தேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதாம்.. அந்தவகையில், என்.எச் 32 ஓட்டல் பொத்தேரியில் கவனத்தை திருப்பி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications