கிறுகிறு கிண்டி டூ பரபர பல்லாவரம்.. சென்னை ஜி.எஸ்.டி ரோடு முழுக்க செம்ம டிராபிக்.. திணறுது தாம்பரம்
சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
வழக்கமாக சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். அதுவும் இப்போது பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து சற்று அதிகரித்தபடியே வருகிறது.

தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், பலரும் சொந்த ஊர் செல்ல முயன்றுகொண்டிருக்கிறார்கள். அதனால்தான், போக்குவரத்து துறையும், காவல்துறையும் பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், வசதிகளையும் செய்து தந்து வருகிறார்கள்.
காவல்துறை: இன்றுகூட, காவல்துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியானது. அதில், தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை-சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 09.11.2023 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, "ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சாலை: அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.
ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் வாகனம்: அதேபோல், தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Tum செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால், இன்று மாலையிலிருந்தே ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையின் இரு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. வழக்கத்தை விட அதிகளவில் வாகனங்கள், பஸ்கள், செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
தீபாவளி பண்டிகை: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். காரணம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, வல்லம் ஒரகடம், மாம்பாக்கம் என 5 சிப்காட்டு அமைந்துள்ளன.. இங்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் இயங்கி வருவதால், கனரக லாரிகளில் உதிரி பாகங்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றன.
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழக்கமாகவே, பிஸியாக இருந்தாலும், தற்போது பண்டிகை காலம் என்பதால், நெரிசல் மேலும் அதிகமாகவே காணப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர்: இதனால், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திருவள்ளூர், தாம்பரம் செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடியவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.. எனினும், சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் எல்லாம், போக்குவரத்து போலீசார், சாலைகளை சீர் செய்து வருகிறார்கள்.. போக்குவரத்தை சரிசெய்து வருவதால், சில மணி நேரத்தில், இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications