85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. ஹாட்ஸ்பாட்டான சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டல்!
சென்னை: சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரம் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்தில் நுழையாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிண்டி
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் 85 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹாட்ஸ்பாட்
இந்த ஹோட்டல் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கிட்டதட்ட இந்த ஹோட்டலானது கொரோனா ஹாட்ஸ்பாட்டாகவே மாறிவிட்டது. இந்த ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்த ஜனவரி 10-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி
இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பான 300-க்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் கிண்டி நட்சத்திர ஹோட்டலில் ஊழியர்கள் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள்
அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறியே உள்ளது. எனவே இந்த ஹோட்டலில் வருகிற 10ம் தேதி வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications