பராமரிப்பு பணி காரணமாக.. இன்று சென்னை டூ கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு மக்கள் மாற்று வழியை பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் கால தாமதமாகவும், குறைந்த எண்ணிக்கையிலும்தான் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து 4 வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை சென்ட்ரல் டூ கும்மிடிப்பூண்டி தடமும் ஒன்று. ஆனால் மற்று மூன்று தடங்களில் இயக்கப்படும் ரயில்களை காட்டிலும் இதில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைவு. அதேபோல ஒரு ரயிலுக்கும், அடுத்த ரயிலுக்கும் ஏறத்தாழ 30 நிமிட இடைவெளி இருக்கும். வேறு எந்த தடத்திலும் இவ்வளவு இடைவெளி இருக்காது.
வடசென்னையை, பெருநகர சென்னையுடன் இணைக்கும் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அதனால்தானோ என்னவோ, திருவொற்றியூரில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இன்று காலை 9.50 முதல் மாலை 3.50 வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே வடசென்னை மக்கள் போக்குவரத்துக்காக மெட்ரோ உள்ளிட்டவற்றை அணுக வேண்டும். இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில்,
சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன
சென்ட்ரலில் இருந்து காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications