சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக சின்னத்தை பயன்படுத்த ஆம்பூர் பிரியாணி கடைகளுக்கு ஹைகோர்ட் தடை

Google Oneindia Tamil News

சென்னை: ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக சின்னத்தை பயன்படுத்த ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆம்பூரில் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க ஸ்டார் பிரியாணி தமிழகம் முழுவதும், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில், நட்சத்திர வடிவத்திற்குள் "எஸ்.பி." என்ற வணிகக் சின்னத்துடன் அமைத்து வருகிறது.

Chennai HC bans to use Ambur Star Briyanis logo

இந்நிலையில், தங்களது பெயரையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடை உரிமையாளர் பிர்தோஸ் அஹமது என்பவருக்கு தடை விதிக்க கோரி, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடை உரிமையாளர் எம்.அனீஸ் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுச்சேரி அரசு சட்டகல்லூரி.. காலி பணியிடம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு!புதுச்சேரி அரசு சட்டகல்லூரி.. காலி பணியிடம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடை வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க அதன் வணிக குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால், ஸ்டார் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரை பயன்படுத்த, அதன் உரிமையாளர் பிர்தோஸ் அகமதுவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
Chennai HC bans to use Ambur Star Briyani's logo in any other briyani shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X