ஆட்டின் தலையில் அண்ணாமலையின் படத்தை மாட்டி! ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிய திமுகவினர்! ஹைகோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்டின் தலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை மாட்டி நடுரோட்டில் ஆட்டை வெட்டி அவரது நாடாளுமன்ற தோல்வியை திமுகவினர் கொண்டாடிய விவகாரத்தை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி தோல்வியை அடுத்து திமுகவினர் பல இடங்களில் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் வெட்டி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து கொண்டாடினர்.

annamalai dmk court

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன்தாஸ் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழக அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டும் அல்லாது இது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்

வாதத்தை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது என காட்டமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். தமிழக அரசு ஒரு வார கால அவகாசத்திற்குள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+