கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என சனாதனத்தை எதிர்த்து உதயநிதி பேசியிருந்தார்.

Chennai HC extends ban for Udhayanidhi to link Edappadi with Kodanad case

இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் உதயநிதியின் தலையை சீவினால் ரூ 10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் தெரிவித்திருந்தார். மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உதயநிதி தனது அறிக்கையில் 'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு நஷ்டஈடாக ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை எனவும், விசாரிக்கப்படவில்லை எனவும், அரசு இயந்திரம் அவர்கள் வசம் தான் உள்ளதால் விசாரித்திருக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், எந்த ஊழல் வழக்கும் இல்லை. திமுக முக்கிய நிர்வாகி 2018ல் அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளதாகவும், இது சம்பந்தமான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்கள், எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்ததாகவும், அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதை ஏற்று, வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+