முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க ஹைகோர்ட்டில் மனு
சென்னை: முதலமைச்சர் , துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.பிரவீன் சமாதானம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக கொடி மற்றும் சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறியுள்ளார்.

நடுநிலையாக செயல்பட வேண்டிய துணை முதலமைச்சர் கட்சி சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது கட்சி சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு வகுக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்பற்றாதது சட்டவிரோதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி சர்ட் அணிய இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications