தமிழகத்தில் நீர் நிலைகளில் விபத்து, மரணத்தை தடுக்க எச்சரிக்கை பலகைகள்.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகளில் விபத்து, மரணங்களை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதை தடுக்க, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும், நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும்போது பக்தர்கள் இறந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை எனவும், தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோவில் திருவிழா காலங்களில் மீட்பு படை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை மூலம் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், அறநிலையத் துறையும் எடுத்த நடவடிக்கைகளை, ஆண்டு முழுவதும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ராமேஸ்வரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மற்ற கடற்கரை கோவில்களிலும் பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மீட்பு பணிக்கு கடலோர காவல்படையை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற அனைத்து விதமான நீர்நிலைகளிலும் விபத்து மரணங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, கோடீஸ்வரி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications