நிதி நிறுவன மோசடி! பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவின் சொத்துக்களை முடக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம், நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் 7 பேருக்கு எதிராக
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக்கோரி தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைவர் எம்.சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்ததாக கருதுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் தங்கள் சொத்துக்களை விற்கக் கூடும் என்பதால், அவர்களின் சொத்துக்களை முடக்கக் கோரி உள்துறை செயலாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன் மற்றும் மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனம் உள்ளிட்டோரின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு, காவல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications