சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு.. திருப்பூர் ஆட்சியர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் 4-ஆம் தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், இந்து கோட்பாடுகளுடன் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி திருப்பூர் முழுவதும் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அமைத்துள்ளனர்.

Chennai HC orders to give reply on removing Hindu front organisations flag

விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் இந்த கொடிக்கம்பங்களை நட்டுள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாம்..அதுக்குன்ணு இப்படியா.. எதிர்க்கட்சியினரின் அதிகப்படியான வருகையால் பாஜக விசுவாசிகள் அப்செட்வரலாம்..அதுக்குன்ணு இப்படியா.. எதிர்க்கட்சியினரின் அதிகப்படியான வருகையால் பாஜக விசுவாசிகள் அப்செட்

ஆனால், உத்தரவிற்கு முரணாக திருப்பூரில் இந்து முன்னணியினர் கொடிக்கம்பங்களை வைத்துள்ளனர். இந்த கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி கடந்த ஜூன் 12 ல் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, திருப்பூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் செப்டம்பர் 4 ம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

English summary
Chennai HC orders Thiruppur Collector to give reply on removing Hindu front organisation's flag by September 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X