திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரான திமுக-வை சேர்ந்த எஸ்.ஜெகத்ரட்சகன், கடந்த 1982ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தபோது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் அளித்த புகாரில் கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகாரை முடித்துவைத்தது.

அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வழக்குகளை பதிவு செய்தது. இதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு வழக்குகளையும் ரத்து செய்தது. இந்த நிலையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிபிசிஐடி தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிகாட்டி, ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications